
posted 17th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்க
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியக் கப்பல்! - திறக்கப்பட்ட கே.கே.எஸ். துறைமுகமும்
சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலாக் கப்பல் ஒன்று வெள்ளிக் கிழமை (16) காங்கேசன்துறையை வந்தடைந்தது.
சுற்றுலாப் பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா வரவேற்றார்.
சென்னை - யாழ்ப்பாணம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியாக வியாழன் (15) சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் இன்று வெள்ளி காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
இதன்போது 25 கோடி ரூபா பெறுமதியில் அமைக்கப்பெற்ற காங்கேசன்துறை துறைமுக முனையத்தையும் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், கப்பல்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)