
posted 28th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழில் இருந்து பாதயாத்திரை ஆரம்பம்
மக்கள் ஒருமித்த தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சாகர தனஞ்சய கட்டிபே ஆராச்சியினால், செவ்வாய்க் கிழமை (27) யாழ்ப்பாணத்தில் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
"வடக்கிலிருந்து மேற்கு நோக்கிய நேச பாத யாத்திரைக்கு நீங்களும் ஒன்றிணையுங்கள்" எனும் தொனிப் பொருளில் இப்பாத யாத்திரை இடம்பெறுகிறது.
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழவேண்டும். இதனால் அனைத்து இன மக்களின் வாழ்வும் இனிமையாகும் என்பதே யாத்திரையின் நோக்கமாகும்.
பாத யாத்திரையின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இவரால் தமிழ் - சிங்கள - ஆங்கில அகராதி ஒன்றும் கையளிக்கப்பட்டது.
நேற்று மாலை ஆரம்பமான பாத யாத்திரை முதற்கட்டமாக திருகோணமலையினை சென்றடையவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)