
posted 17th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யானைகளால் ஏற்படும் அழிவுகள்
தோப்பூர் - அப்ரார் நகர் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளன.
இதன்போது சுமார் 50 இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் முறித்தும், தென்னை மரக் குருத்துக்களை சாப்பிட்டும் சேதப்படுத்தியுள்ளன. அத்தோடு பாதுகாப்பு வேலிகளுக்கும் சேதம் விளைவித்துள்ளன.
கிழக்கிழங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருவதடன் பல அழிவுகளையும் மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
காட்டு யானைகளின் தெல்லையினை நிரந்தரமாக கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)