மூவருக்குக் கௌரவம்
மூவருக்குக் கௌரவம்

தேனாரத்தின் கிழக்கு மாகாணச் செய்தியாளர் திரு சலீமிற்கு எமது இணையத்தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மூவருக்குக் கௌரவம்

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 25 ஆவது வெள்ளி விழா வருட 2023 / 2024 புதிய நிருவாகிகளின் பதவியேற்பு விழாவில் மூவருக்கு அவர்களது சேவைகளைப் பாராட்டி கழகத்தால் கௌரவம் அளிக்கப்பட்டது.

கல்முனை கிறீன் பார்க்றிசோட் மண்டபத்தில் நடைபெற்ற இப் பெரு விழாவில், கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி. எம். கோபாலரெட்ணம் அவர்களால் கிழக்கின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களான கலாபூஸணம் ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் - கிழக்கு மாகாண செய்தியாளர்) ஊடகர் செல்லையா பேரின்பராசா ஆகியோரே பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

விசேடமாக இடம் பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வின் போது, விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட லயன்ஸ் மாவட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது உதவி மாவட்ட ஆளுநர் லயன் கயா உபசேன கௌரவிக்கப்பட்ட மூவருக்கும் பொன்னாடை போர்த்தியதுடன், கழகத்தின் புதிய தலைவர் பொறியியலாளர் எம். சுதர்சன், செயலாளர் லயன் ஏ.எலம்.எம். பாயிஸ், பொருளாளர் லயன். எம். பரமேஸ்வரநாதன் ஆகியோர் மாலைகள் அணிவித்தும் கௌரவமளித்தனர்.

கௌரவிக்கப்பட்ட மூவருக்கும் விழாவில் கலந்து கொண்ட கழக முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் வாழ்த்தினையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

மூவருக்குக் கௌரவம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)