
posted 17th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு
சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு வெள்ளிக்கிழமை (16) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் முதல்வர் திரு.இ. சிறீதரன் அவர்களது தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
விருந்தினர்கள் மேற்கத்தேய வாத்திய இசை முழங்க அழைத்து வரப்பட்டு கொடியேற்றும் நிகழ்வே இடம்பெற்றது. அதனையடுத்து விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது சபாநாயகராக பா. அகல்யா தெரிவு செய்யப்பட்டார். அதன்பின்னர் அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது. பின்னர் அமைச்சர்கள் தமது திட்டங்கள் பற்றி மன்றில் தெரிவித்தனர். இறுதியில் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
இந்நிகழ்வில் வலயக் கல்வி அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)