
posted 10th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
மாகாண ஆளுநருடன் சந்திப்பு
கிழக்கு மாகாண அபிவிருத்தி, மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, காணிப் பிரச்சினை, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலயமான சௌமிய பவனில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சியளிப்பதாகவும், அவ்வாறான ஒருவரை கிழக்கு மக்கள் முழுமையாக ஆதரிப்பதாவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)