
posted 25th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பேரீச்சம் பழம் அறுவடையை ஆரம்பித்து வைத்த ஆளுநர்
காத்தான்குடியில் பேரீச்சம் பழம் அறுவடையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்!
பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம் பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளரிடம் இருந்து கௌரவ ஆளுநர் பெற்றுக் கொண்டார்.
இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)