
posted 6th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஶ்ரீ மனோஜ் குமார், ஶ்ரீ நாகராஜன் ராமஸ்சுவாமி மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், பொறியியல் பீடாதிபதி ஏந்திரி கே. பிரபாகரன், முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஏ. அற்புதராஜா, குடிசார் பொறியியல் துறைத் தலைவர் கலாநிதி பி. கேதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் சார்பில், கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பாடசாலையின் (School of computer science and Engineering - SCOPE) பீடாதிபதி கலாநிதி கே.ரமேஸ் பாபு, பேராசிரியர் பி. சுவர்ணலதா மற்றும் சர்வதேச உறவுகளுக்கான உதவிப் பணிப்பாளர் கலாநிதி ஜே.என்.வி. ரகுராம் ஆகியோர் நிகழ்நிலை வாயிலாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)