
posted 18th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பந்துல குணவர்தன - செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல்!
போக்குவரத்து மற்றும் தபால் அமைச்சர் பந்துல குணவர்தனவைச் சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதன் போது தபால் சேவையில் நியமனம் பெற்ற பெருந்தோட்ட இளைஞர்கள் அடிப்படை சம்பள விகிதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.. அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கவனம் செலுத்துமாறு செந்தில் தொண்டமான் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.
செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க பந்துல குணவர்தன ஒப்புக்கொண்டதுடன், அவரது வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் கையளித்தார்.
கொழும்பில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)