நிர்வாகிகள் தெரிவு

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிர்வாகிகள் தெரிவு

மன்னார் மாவட்டத்தின் மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் 25 வது வருடாந்த பொதுக்கூட்டம் இதன் அலுவலகத்தில் சனிக்கிழமை (17) காலை இதன் தலைவர் அருட்பணி ரி. நவரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நடப்பு வருட புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது.

இந் நிர்வாகத் தெரிவானது இச்சங்கத்தின் ஸ்தாபகரும், மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் குருமுதல்வருமான அருட்பணி ஏ. சேவியர் குரூஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றபோது,

இதில் தலைவராக அருட்பணி ரி. நவரட்ணம் அடிகளாரும், நான்கு சமயங்களிலிருந்தும் உப தலைவர்களாக திரு எஸ்.எஸ். இராமகிருஷ்ணன், ஐனாப்.எம. எம். சபூர்தின், வண.விமலரத்ன தேரர், அருட்பணி. எஸ்.மாக்கஸ் அடிகளாரும்,

செயலாளராக எஸ்.ஏ. ராதா பெர்னாண்டோ , உப செயலாளராக எஸ். சூசைநாயகம் றெவ்வல்,

பொருளாளர் ரி. மரியதாஸ், உப பொருளாளராக யூட் பிகிராடோ,

மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவில்,

மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் ஜே. அன்ரன் பிகிராடோ, சிங்கிலேயர் பீற்றர்,

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் ஏ.மரியதாஸ், என்.தங்கராசா,

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வி. விமலேந்திரன், திருமதி பி. பெப்பி விக்ரர் லெம்பேட்,

முசலி பிரதேச செயலகப் பிரிவில் எம்.எக்ஸ்.டபரேரா, ஜனாப் எவ்.எம். அசீம்

மடு பிரதேச செயலகப் பிரிவில் ஜே.சூசைப்பிள்ளை, பி. யோசப் பேணாட் ஆகியோரும்,

பொது உறுப்பினர்களாக வி.ஜே.அருள்சீலன் டயஸ், ஏ. சூரியகுமார்.

ஆலோசகராக அருட்பணி ஏ. சேவியர் குரூஸ் ஆகிய மொத்தம் 22 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்ட அமர்வில் விஷேட அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் மற்றும் இந்து சமய தேசகீர்த்தி சிவஸ்ரீ மஹாதர்மகுமாரக் குருக்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிர்வாகிகள் தெரிவு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)