நிதி மோசடிக் குழுவினர்

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிதி மோசடிக் குழுவினர்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி அப்பாவியான இளைஞர், யுவதிகளிடம் பெருந்தொகையான நிதி மோசடியில் ஒரு குழுவினர் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளமையால் மன்னார் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையுன் இருக்க வேண்டும் என மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (06) செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

அண்மைக்காலமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வேலையற்றோருக்கு வேலை பெற்று தருவதாக கூறி குறித்த குழுவினர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை (5) அன்றும் இவ்வாறு வேலை பெற்று தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளோடு குறித்த மோசடிக்காரர்கள் கதைப்பது போல் தொலைபேசியில் பாவனை செய்து மக்களை ஏமாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

இது மட்டுமின்றி பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் பொருட்கள் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தும் இக் குழுவினர் நிதி மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

ஆகவே, இது தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுடன் பிரதேச செயலகங்கள் அரச திணைக்களங்களில் அரச பதவி பெறுவதற்காக எந்த ஒரு நிதியையும் பெற்றுக் கொண்டு அரசு பதவிகள் வழங்கப்படுவதில்லை என யாவருக்கும் தெரியப்படுத்துகின்றோம்.

இவ்வாறான எந்த ஏற்பாடுகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறான பொருட்களும் கூட தனி நபர்களுக்கு வழங்குவதற்கு எந்த ஒரு நடைமுறைகளும் இல்லை. அவ்வாறு செய்வது சட்டத்திற்கு முரண்பாடான ஒன்று ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் உங்களை சந்திக்கும் போது உடனடியாக அவர்களுடைய அடையாள அட்டையை உங்களுடைய தொலைபேசியில் பதிவு செய்து கொள்வதோடு உங்கள் அருகில் உள்ள கிராம அலுவலர்கள் அல்லது போலீஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்கும்படியும் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறான நிதி மோசடிகள் மன்னார் மாவட்டத்தில் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கும் பொது மக்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன் என்றார்.

நிதி மோசடிக் குழுவினர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)