நாளை காரைதீவில் பிரதான நிகழ்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நாளை காரைதீவில் பிரதான நிகழ்வு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 ஆவது தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வின் இறுதியானதும், பிரதானமானதுமான நிகழ்வு நாளை ஞயிற்றுக்கிழமை (25.06.2023) கிழக்கிலங்கையின் முக்கிய தமிழ்ப் பிரதேசமான காரைதீவில் நடைபெறவிருக்கின்றது.

ஜுன் 19 ஆம் திகதி தியாகிகள் தினத்தையொட்டியதாக தியாகிகள் தின நிகழ்வுகள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வடக்கு கிழக்கில் சிறப்பாகவும், உணர்வு பூர்வமாகவும் இடம் பெற்று வருகின்றன.

விடுதலைக்காய் உயிரிழந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவேந்தும் குறித்த தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வுகள் கடந்தவாரம் முதல் மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம் பெற்றுவருவதுடன், பல்வேறு பிரதேசங்களிலும் இதனையொட்டிய சிரமதான மற்றும் இரத்ததான நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றன.

இதன்படி தியாகிகள் தின இறுதி நிகழ்வு நாளை காரைதீவு, விபுலாநந்தா கலாச்சார மண்டபத்தில் பிரதான நிகழ்வாகவும் இடம் பெறவுள்ளது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் தோழர் சின்னையா (சர்மா) வின் தலைமையிலும், நெறிப்படுத்தலிலும் இடம்பெறவுள்ள இந்த பிரதான அஞ்சலி நிகழ்வில் ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். அத்துடன் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட சகோதர கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், மேற்படி பிரதான நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் எஸ். புண்ணிய நாதன் (கரன்) தலைமையிலான குழுவினர் சிறப்புற செய்துள்ளனர் தவிரவும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை தலைமையேற்று வழிநடாத்திய செயலாளர் நாயகமும், தென்னிலங்கை மற்றும் சர்வதேச முற்போக்கு இடதுசாரி சக்திகளுடன் உறவுகளைப் பேணிவந்த மக்கள் நேய மனிதாபிமானப் போராளி தோழர் பத்மநாபாவும் 13 தோழர்களும் தமிழகத்தில் ஒரே இடத்தில் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்ட இத்தினத்தையே உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், பொது மக்களையும் நினைவு கூறும் தியாகிகள் தினமாக சர்வதேச ரீதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை காரைதீவில் பிரதான நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)