
posted 28th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நட்டத்திற்கு நெல் கொள்வனவு - நியாயம் கேட்க வீதியில் இறங்கிய விவசாயிகள்
நெல்லுக்கான விலையினை உரிய நேரத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று புதன்காலை 9 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமானது.
கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து. அங்கு விவசாயிகள் தொடர்பில் மகஜர் கையளிக்கப்பட்டது.
தற்பொழுது நெல்லினை 48 தொடக்கம் 50ரூபாய்க்கே கொள்வனவு செய்யப்படுவதாகவும், ஆனால், எமக்கு அறுவடை முடிவில் ஏற்பட்டுள்ள செலவீனம் 85 ரூபாய் முடிவடைகின்றதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினர் அவர்களின் களஞ்சிய சாலைகள் அனைத்துமே வெறுமனே காணப்படுவதாகவும், இருப்பினும் நெல் கொள்வனவு உரிய காலத்தில் உரிய விலையில் கொள்வனவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வீணாக எம்மீது சுமத்துகின்றனர்.
எமக்கு ஒரு நியாயமான, தீர்க்கமான முடிவொன்றை நீங்கள் பெற்றுத் தருவீர்கள் என நாங்கள் எமது மகஜரை மேலதிக அரசாக்க அதிபர் ஶ்ரீமோகனிடமும், நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் கையளிக்கின்றோம்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)