
posted 9th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 100 வது அலையன்ஸ் ஏர் விமானம்
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 100வது அலையன்ஸ் ஏர் விமானம் புதன்கிழமை (07) மீண்டும் தொடங்கப்பட்டத்திலிருந்து 10,500ற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
07.06.2023அன்று சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் 100வது விமானச் சேவையைக் குறிக்கிறது.
தொற்றுநோய் காலத்தில் இடைநிறுத்தத்திற்குப் பின்பு பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது.
இந்தச் சேவையில் இரு வழி பயணிகளின் எண்ணிக்கை டிசம்பர் 12ற்கிடையில் இன்று வரை மொத்தம் 10,500ற்கும் அதிகமாக உள்ளது.
கான்சல் ஜெனரல் தனது அறிக்கையில், இந்தச் சேவையின் இவ்வாறான முன்னேற்றமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று கூறினார்.
அதிகரித்த இணைப்பு வர்த்தகமானது முதலீட்டினை ஊக்குவிப்பது மட்டுமன்றி, இரு நாடுகளுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பொருளாதார மீட்சிக்குக் குறிப்பாக பொருளாதார வீழ்ச்சிகண்ட இலங்கையின் பொருளாதரத்தினை மீட்டெடுப்பதற்கு ஒரளவு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)