
posted 7th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
சிறுகதை நூல் வெளியீட்டு விழா
இலங்கை மட்டக்களப்பை சேர்ந்தவரும் தற்சமயம் சுவிஸ் நாட்டில் வசிப்பவருமான பிரபல ஊடகவியலாளரும், எழுத்தாளருமான சண் தவராஜாவின் காணாமல் போனவர்கள் சிறுகதை நூல் வெளியீட்டு விழா சென்னை தமிழ் இணையக் கழகத்தில் நிமிர் இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் (04-06-2023) சிறப்பாக நடைபெற்றது
கதை சொல்லி பவா செல்லதுரை நூலை வெளியிட வழக்கறிஞர் அ. அருள்மொழி பெற்றுக் கொண்டு நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார். பேராசிரியர் அரங்கமல்லிகா மதிப்புரை வழங்கினார். பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர். சிங்கார சுகுமாறன், நல்லு இரா. லிங்கம், தொல்காப்பியன் சிவராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலாசிரியர் சண் தவராஜா ஏற்புரையாற்ற கவிஞர் கா.பாபுசசிதரன் நன்றி கூறினார் கவிஞர் செ.ரா. கிருஷ்ணகுமாரி நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)