
posted 27th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிறப்புற நடந்த லயன்ஸ் கழகத்தின் பதவியேற்பு விழா
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 25 ஆவது வெள்ளிவிழா வருட (2023 / 24) புதிய நிருவாகிகளின் பதவியேற்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கல்முனை கீறீன் பார்க்றிசோட் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விமரிசையான பதவியேற்பு விழாவில், லயன்ஸ் மாவட்ட, தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது உதவிமாவட்ட ஆளுநர் லயன் கயா உபசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
விழாவிற்கு வருகை தந்த பிரதம அதிதி உதவி மாவட்ட ஆளுநர் லயன் கயா உபசேன மற்றும் லயன் மாவட்ட முக்கியஸ்த்தர்கள் கழகத் தலைவர் பொறியலாளர் எம்.சுதர்சன் மற்றும் உறுப்பினர்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.
இதேவேளை கழகத்தின் புதிய நடப்பாண்டுக்கான (2023 / 2024) தலைவராகத் தெரிவு செய்ப்பட்டுள்ள லயன், பொறியியலாளர் எம்.சுதர்சன், செயலாளர் லயன் ஏ.எல்.எம். பாயிஸ், பொருளாளர் லயன், எம். பரமேஸ்வரநாதன் ஆகியோர் உட்பட தெரிவு செய்யப்பட்டுள்ள கழகத்தின் புதிய நிருவாகிகளுக்கு, பிரதம அதிதி இரண்டாவது உதவி மாவட்ட ஆளுநர் லயன் கயா உபசேன பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அத்துடன் கழகத்தின் எதிர் கால செயற்பாடுகள் தொடர்பாகவும், புதிய நிருவாகிகளின் கடமைப் பொறுப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
மேலும், கடந்த 25 வருடகாலமாக அளப்பரிய சேவைகளாற்றிவரும் மூத்த கழகமான கல்முனை நகரலயன்ஸ் கழகத்திற்கு பெரும் பாராட்டைத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் கழக உறுப்பினர்களாக புதியவர்களையும், குறிப்பாக இளைஞர்களையும் இணைத்துக்கொள்வதுடன், சிறந்த செயற்திட்டங்களை வகுத்து செயற்பட முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)