
posted 18th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிறந்த இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர், குருதிக்கொடையாளர் விருது
மாகாண ரீதியாக இடம்பெற்ற சிறந்த இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர் தேர்வில், ஊர்காவற்றுறை கருகம்பனை தமிழ் மன்ற சன சமூக நிலைய, இந்து இளைஞர் கழக மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகத்தின் இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர் ச. லக்ஸன் அவர்கள் வடமாகாணத்திலேயே சிறந்த இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர் மற்றும் குருதிக்கொடையாளர் என்ற விருதினை பெற்றுக் கொண்டார்.
WORLD BLOOD DONOR DAY அன்று (14) கொழும்பு நாரயன்பிட்டியில் உள்ள மத்திய இரத்த வங்கியில் பணிப்பாளர் தேசியகுருதிமாற்று பிரயோகசேவை நாரயன்பிட்டிய அவர்களால் இந்த விருது வழங்கிவைக்கப்பட்டது.
இவர் இளம்பராயம் தொட்டே இவ்வாறான சமூகசேவையில் தீராதமோகம் கொண்டவர். இவர் இதுவரையில் அறுபதுக்கும் மேற்பட்ட இரத்ததான முகாம்களை ஒழுங்கமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 41 தடவை இரத்ததானம் செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)