
posted 21st June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கைவிரல் அடையாளங்களைப் பதிவு நடவடிக்கை
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலக ஆட்பதிவுக் கிளையில் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறியால் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு இணையத்தளமூடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு அவர்களது தொலைபேசிக்கு அனுப்பப்படும் குறுந்தகவலுக்கு அமைய அவர்கள் பிரதேச செயலக ஆட்பதிவுக் கிளைக்குச் சென்று தமது கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
யாழ். மாவட்டத்தில் இந்த நடவடிக்கைக்காகப் பருத்தித்துறை பிரதேச செயலகமும் சாவகச்சேரி பிரதேச செயலகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)