
posted 6th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
குடிநீர்ப் பிரச்சினைத் தீர்விற்கு திட்டவரைவு
பல வருடங்களாக மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்கள் எதிர்நோக்கி வருகின்ற குடிதண்ணீர் பிரச்சினையின் உண்மைத் தன்மையை இனங்கண்டு அதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி நீலாப்பொலை நீரேற்றும் நிலையத்துக்கு சென்று நிலைமைகளை அவதானித்தார்.
இதன்போது, நீரேற்றும் நிலையத்துக்கு மகாவலி நீர் வருவதில்லை. தற்போது, நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீரேற்றும் இடத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு ஏதாவது கோளாறு ஏற்படுமாக இருந்தால் நீர் விநியோகம் தடைப்படும் என்ற விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு திட்டவரைவு ஒன்றை கிழக்கு மாகாண பிரதி பொதுமுகாமையாளரிடம் கோரியுள்ளதாகவும் விரைவில் உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களில் அனுமதியை பெற்று நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, உதவிப் பொறியியலாளர்களான அரபாத் மற்றும் சர்ஜூன் ஆகியோரும் உடனிருந்தனர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)