கால்நடை வளர்ப்பாளர்கள் புகார்

உறவுகளின் துயர் பகிர

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கால்நடை வளர்ப்பாளர்கள் புகார்

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற கற்ப முற்றிருந்த மாட்டை அறுத்து கொடூரம் இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு சொந்தமான மாதவனை மேய்ச்சல் தரையில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இரு சாராரும் அடிக்கடி முரண்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேய்ச்சலுக்கு செல்லும் தமிழரின் மாடுகள் வெட்டியும் சுட்டும் கொல்லப்படுகின்றன என்று முறைப்பாடுகள் செய்யப்படுவது வழமையாக உள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கன்றுதாச்சி மாட்டை காணவில்லை என உரிமையாளர் தேடிச் சென்றார். இந்த நிலையில் அந்தப் பசு மாடு இறைச்சிக்காக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டது.

இது குறித்து பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், அடிக்கடி தொடரும் இந்த அடாவடி நடவடிக்கையை நிறுத்துவதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பாளர்கள் புகார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)