
posted 26th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
காணி அபகரிப்பை தடுத்து நிறுத்து
சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி பொன்நகர் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று திங்கள் முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அரச அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தமக்கு விரும்பியவர்களுக்கு வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டி அப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பித்து கரைச்சி பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் முன்பாக சென்று நிறைவடைந்தது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனின் கவனத்துக்காக மகஜர் ஒன்றும் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சிறிமோகனனிடம் கையளிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)