
posted 11th June 2023

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கலைவாதி கலீல் மறைவு
மூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளருமான தாஜுல் உலூம் கலைவாதி கலீலின் மறைவு தொடர்பில் அரசியல் முக்கியஸ்த்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
தர்ஹாநகர் கல்விக் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும், “நவமணி” பத்திரிகையின் ஆசிரியபீட முக்கியஸ்த்தருமான கலைவாதி கலீல் நாடறிந்த மூத்த இலக்கியகர்த்தாவுமாவார்.
பன்முக ஆளுமை கொண்ட பல் துறைக் கலைஞரான தாஜுல் உலூம் கலைவாதிகலீல் கடந்த வெள்ளிக் கிழமை (09) இறையடியெய்தியதுடன்,
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் பாணந்துறை எழுவில ஜும்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, உபபீடாதிபதியாக, கலைஞனாக முஸ்லிம் மீடியா போரத்தின் துணைத் தலைவராகவுமிருந்து சமூகத்திற்கும், கலைக்கும் பெருந் தொண்டாற்றி வந்த அன்னாரது இழப்பு பேரிழப்பாகுமெனப் பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
“புனைப் பெயராலே புகழ்பெற்ற மூத்த ஆளுமை கலைவாதிகலீல்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வலம்புரி கவிதாவட்டம் உட்பட இலக்கிய அமைப்புக்கள், ஊடக அமைப்புக்கள் பலவும் அன்னாரது மறைவு தொடர்பில் ஆழ்ந்த அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)