
posted 9th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கதிர்காமம் பாதயாத்திரை முதல் கட்டமாக ஆரம்பம்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி சாமிமலை நகரில் இருந்து ஆரம்பமான முதல் கட்டமாக கதிர்காமம் பாதயாத்திரை வியாழக்கிழமை (08.06.2023.) மாலை 6 மணிக்கு மஸ்கெலியா நகரை சென்றடைந்தது.
மீண்டும் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடை பயணமாக நோர்வூட் நகரில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கி சென்று அங்கு வியாழக்கிழமை (08) தங்கி வெள்ளிக்கிழமை (09) காலை அங்கு இருந்து தலவாக்கலை நகர் வரை நடை பயணமாக செல்ல உள்ளனர்.
இக் குழுவினர் தொடர்ந்து 10 நாட்கள் நடைப்பயனமாக கதிர்காமம் செல்ல உள்ளனர்.
அவர்கள் அனைவரும் எதிர் வரும் 19 ம் திகதி காலை கதிர்காமம் முருகன் ஆலயம் சென்று தரிசனம் செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)