கதிர்காமக் கந்தனினைப்பாரக்க முருக பக்தர்கள் வேல்களுடன் பயணம்

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கதிர்காமக் கந்தனினைப்பாரக்க முருக பக்தர்கள் வேல்களுடன் பயணம்

1,000 வேல்களுடன், 1000 முருக பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பயணிக்கும் மாபெரும் வேல் யாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பினரால் இவ்வருடத்தில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து இவ் ஆறு நாட்கள் வேல் யாத்திரை ஆரம்பமாகின்றது.

திருமூலர் பெருமானின் அருளாசியுடன், சித்தர்களின் குரல் சிவசங்கர் குருஜியின் நேரடி வழிகாட்டலின் கீழ் இவ்வருடத்தில் இருந்து 1,000 வேல்களுடன், 1000 முருக பக்தர்கள் பயணிக்கும் மாபெரும் வேல் யாத்திரையாக, கதிர்காமம் நோக்கி கந்தனை தரிசிக்க வேலோடு மலையில் இருந்து "பாத யாத்திரை" தொடங்குகிறது.

இந்த மாபெரும் வேல் யாத்திரையை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் ஆதீனகர்த்தா முருகஸ்ரீ தியாகராஜா ஆசிரியர் வேல்சாமியாக இருந்து இவ்வருடம் முதல் யாத்திரையை தலைமையேற்று நடத்துகிறார்.

அதற்குரிய சம்பிரதாய வழிபாடுகள் அனைத்தும் சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில் கடந்த சனிக்கிழமை பௌர்ணமி தினம் வேலோடுமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.

சித்தர்களின் குரல் யாத்திரையின் வேல் சாமியாக முருக பெருமான் சந்நிதியின் வேலை வேல்சாமி தியாகராஜா பெற்றுக்கொண்டார்.
வருகின்ற ஜூன் 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வேலோடுமலையில் அனைத்து பூசை நிகழ்வுகளும் நடைபெற்று 13ஆம் திகதி வியாழக்கிழமை பஸ் மூலம் உகந்தை மலைநோக்கிய பயணம் ஆரம்பமாகும். தொடர்ந்து 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உகந்தை மலையில் இருந்து பாத யாத்திரை ஆரம்பித்து 19ம் திகதி திங்கட்கிழமை நண்பகல் கதிர்காமத்தை சென்றடையும்.

அனைத்து நாட்களும் யாத்திரீகர்கள் அனைவருக்கும் மூன்றுவேளை சாத்வீக உணவும், இரண்டு வேளை தேனீரும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

அனைத்து ஏற்பாடுகளையும் சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன் ஆகியோரின் நேரடி ஏற்பாட்டின் கீழ் நடைபெறுகிறது.

கதிர்காமக் கந்தனினைப்பாரக்க முருக பக்தர்கள் வேல்களுடன் பயணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)