கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கப்பட்டது

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கப்பட்டது

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை இன்று (12) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முன்னிலையில் காலை 7.30 மணியளவில் காட்டுப்பாதை திறக்கப்பட்டது.

இம்முறை காட்டுப்பாதையூடாக சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து காலை 7 மணியளவில் காட்டுப் பாதை திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.என். டக்ளஸ், மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், லாகுகலை பிரதேச செயலாளர் என். நவநீதராஜா ,மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர், ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க உள்ளிட்ட யாத்தியர்கள் பல அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அனிருத்தனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி ஆகியோரின் ஏற்பாட்டில் காட்டுப் பாதை திறந்து வைக்கப்பட்டது. முதல் நாளிலேயே சுமார் 2000 பாதயாத்திரீகர்கள் பயணித்தனர்.

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கப்பட்டது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)