
posted 13th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கடவுச்சீட்டு கிளைக் காரியாலயம் கல்முனையிலும் அமைத்து வசதி செய்க
கிழக்கு மாகாண மக்களுக்கு உதவும் வகையில் கடவுச்சீட்டு கிளைக் காரியாலயம் ஒன்றை அல்லது விண்ணப்பித்து கையொப்பமிடும் வசதியை கல்முனையில் அமைக்கும்படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது பற்றி கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
நாட்டில் பொருளாதார கஷ்டங்கள் இருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் கொழும்புக்கு சென்று பாஸ்போட்டை பெற விண்ணப்பிக்க பல்லாயிரம் ரூபாக்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பாஸ்போட் கிளைக் காரியாலயம் அமைக்கும்படி கடந்த வருடம் கௌரவ ஜனாதிபதியை கடிதம் மூலம் கோரினோம்.
தற்போது பாஸ்போட் பெற விரும்புவோர் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பிரதேச செயலகங்களில் கையொப்பமிட முடியும் என அரசு அறிவித்துள்ளமை ஓரளவு ஆறுதல் தரும் விடயமாகும்.
ஆனாலும், அதிக சனத்தொகையும், பின் தங்கிய கொலணி போன்ற பிரதேசங்களை அண்மித்ததுமான கிழக்கின் முகவெற்றிலை என அறியப்பட்ட கல்முனை பிரதேச செயலகத்துக்கும் இதற்கான அனுமதியை வழங்கும்படி கௌரவ ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது எனத் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)