
posted 20th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கடமை பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால், புதிய நியமனம் வழங்கப்பட்ட உயரதிகாரிகளான நாகராசா மணிவண்ணன், ஏ.மன்சூர் ஆகியோர் உத்தியோக பூர்வமாகத் தமது பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கிழக்கில் உள்ளுராட்சி ஆணையாளராகப் பதவி வகித்த நாகராசா மணிவண்ணன், உள்ளுராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ. மன்சூர் வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராகவும் நியமித்து ஆளுநரால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டதை ஏற்று மேற்படி இருவருக்கும் ஆளுநரால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதன்படி இருவரும் தத்தமது புதிய அலுவலகங்களில் உத்தியோக பூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும், புதிய பதவிகளில் நியமனம் பெற்றுள்ள இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)