
posted 21st June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஓய்வு பெற்ற வைத்தியத் தம்பதி வசித்த வீட்டின் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற வைத்தியத் தம்பதி வசித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கந்தர்மடம், மணற்தரைவீதியிலுள்ள வீடொன்றின் மீதே நேற்று முன் தினம் திங்கள் இரவு 10.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திய பின்னர், வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துள்ளனர்.
காணிப் பிணக்கு ஒன்றின் எதிரொலியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமா என்று சந்தேகிக்கப்படுகிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)