ஓட்டுதொழிற்சாலையை மீள இயக்க நிபுணர் குழு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஓட்டுதொழிற்சாலையை மீள இயக்க நிபுணர் குழு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுதொழிற்சாலையை மீள இயக்குதல் தொடர்பாக ஆராய நிபுணர் குழுவுடன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் நேற்று (27) செவ்வாய் அங்கு சென்றார்.

இது தொடர்பில், அவர் கருத்து வெளியிடுகையில்,

அரசியலை தாண்டி எமது இளைஞர், யுவதிகளின் வேலை வாய்ப்பு தொடர்பில் சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த ஓட்டு தொழில்சாலை இயங்குவதன் மூலம் இந்தப் பிரதேச மக்கள் தமக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றார்கள்.

இதன் அடிப்படையில், 3 இயந்திரவியல் பொறியியலாளர்கள், ஒரு குடிசார் பொறியிலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி உட்பட நிபுணத்துவ குழுவுடன் அங்கு சென்று கலந்துரையாடிய நிலையில் அரசாங்க கூட்டுத்தாபனத்தின் கீழ் காணப்படும் இந்த தொழில்சாலையை இயக்குவதற்கான சாத்தியகூற்று அறிக்கை ஒன்றை வரைந்து கைத்தொழில் அமைச்சருடன் கலந்துரையாட இருக்கின்றோம்.

பெரும் செயல் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. மிகவும் எளிதாக இதனை இயங்க வைக்க முடியும். இதன் மூலம் வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் பங்களிப்பை ஏற்படுத்தும் என்றார்.

ஓட்டுதொழிற்சாலையை மீள இயக்க நிபுணர் குழு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)