ஐஸ் போதைக்கு அடிமையாகிய இளைஞன் தற்கொலை

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஐஸ் போதைக்கு அடிமையாகிய இளைஞன் தற்கொலை

போதைக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவரை அவரை அதிலிருந்து மீட்டெடுபதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் அவ்விளைஞன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் திங்கள் கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது. இறந்தவர் பொடிமாத்தையா சந்திரசேன அனச்ராஜ் (வயது 21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவரின் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ. குமணகுமார் விசாரணையை மேற்கொண்ட போது, இறந்தவரின் பெற்றோர் சாட்சியம் அளித்தனர். இதன் மூலம் தெரியவருவதாவது;

தங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளைகளும். இதில் இறந்தவர் மூத்த மகன். இவரின் பெயர் அனச்ராஜ் (வது 21).

இவர் சில காலமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐஸ் என்ற போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்துள்ளார்.

இவருடன் சேர்ந்து திரிந்த நண்பர் ஒருவரை இப் போதைப் பாவனை சம்பந்தமாக பொலிசார் கைது செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவரின் நடத்தை சம்பந்தமாக பெற்றோர்களாகிய நாங்கள் பொலிசாருக்கு தெரிவித்தபொழுது இவருக்கு சுமார் 7 , 8 மாதங்களாக நன்னடத்தை வழிகாட்டலும், செயல்பாடுகளுக்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன் இவருக்கு வைத்தியசாலையிலும் சிகிச்சைகள் அளிக்கப்படடிருந்தன. இவ்வாறான நிலையிலேயே இவர் சம்பவ தினத்தன்று (12) தனது படுக்கையில் கட்டப்பட்டிருந்த நுளம்பு வலை கயிறுகளை முறுக்கி எடுத்து தனது அறையின் கூரையில் தூக்கிலிட்டு மரணத்தை தழுவிக் கொண்டார் எனவும், இவரை காலைச் சாப்பாடு சாப்பிட அழைத்தபோது இவர் சாப்பிட வராது யோசனையில் அமர்ந்திருந்தார். பின் வீட்டிலிருந்தவர்கள் தங்கள், தங்கள் கடமைகளுக்காக வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டனர்.

காலை 9 மணியளவில் இவர் தனது கட்டிலில் படுத்திருந்தார். பின் 10 மணியளவில் தாயாகிய நான் மீண்டும் இவரை பார்ப்பதற்கு இவரின் அறையை நாடியபோதே இவர் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இவரின் மரணம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ. குமணகுமார் உடற்கூற்று பரிசோதனைக்கு கட்டளைப் பிறப்பித்ததுடன் பின் இவரின் உடலை உறவினரிடம் ஒப்படைக்க பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

ஐஸ் போதைக்கு அடிமையாகிய இளைஞன் தற்கொலை

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)