எதற்கும் அஞ்சேன் என்றாகிறார் உபவேந்தர்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

எதற்கும் அஞ்சேன் என்றாகிறார் உபவேந்தர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்காக காழ்ப்புணர்ச்சி கொண்ட சமூக விரோதிகள் என் மீதும், பல்கலைக்கழகம் மீதும் மிலேச்சத்தனமான குற்றச் சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்”

இவ்வாறு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் சூளுரைத்தார்.

இன்று (28) மாலை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக மண்டபத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் கூட இவ்வாறு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலை அறியாது அபாண்டமாகக் கருத்து வெளியிட்டமை தொடர்பில் கவலையும், விசனமும் வெளியிட்டார்.

அண்மைக் காலமாக சில காழ்புணர்ச்சி கொண்டவர்களால் சமூக வலைத்தளங்களிலும், பொது வெளிகளிலும் தமக்கெதிராகவும், பல்கலைக்கழகத்திற்கு மாசு கற்பிக்கப்படும் வகையிலும் விசமத்தனமாக வெளியிடப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில் உப வேந்தரால் இந்த ஊடக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உபவேந்தர் போராசிரியல் ரமீஸ் அபூபக்கர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்.

“தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவனாக நுழைந்து இங்கேயே விரிவுரையாளராகவும் இருந்து, உப வேந்தர் பதவியும் பெற்று இன்று வரை இப்பல்கலைக்கழகத்தின் இருப்புடன் இணைந்து, ஈர்ப்பு அதிகம் கொண்டவனாக இருந்து வருகின்றேன்.

நான் இளைப்பாறும் வரை கௌரவமாகவும், இப்பல்கலைக்கழகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவததையே இலட்சியமாகக் கொண்டுள்ளேன்.

இந்தப் போலி வேடதாரிகளின் நாசகார நடவடிக்கைகளுக்காக என்னை நம்பியுள்ள இந்த உயர் நிறுவனத்தைக் கைவிடவும் நான் தயாரில்லை. இப் பல்கலைக்கழகமும், பல்கலைக்கழக நிருவாகமும், வினைத்திறனாக செயற்படுவதைப் பொறுக்க முடியாதவர்களே இன்று சோடிக்கப்பட்ட விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சமூக வலைத்தளங்களில் கூடுதலாக முன்வைத்து வருகின்றனர்.

கடந்த இரு வருட காலமாக இத்தகைய சமூக விரோதிகளின் செயற்பாடுகளையிட்டு நான் பொறுமைகாத்து வந்த போதிலும், இனியும் உண்மைத் தன்மைகளைத் தெளிவுபடுத்தாமலிருக்க முடியாது.

எனினும், எனக்கு மானபங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடரும் இத்தகைய விஷமத்தனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நான் கவனம் கொண்டுள்ளேன்.

சட்ட ரீதியாக எதனையும் எதிர்கொள்ள முடியாத, முகவர்களுடாகவும் இவ்வாறு கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும்.

எனது செயற்பாடுகளில் குறிப்பாக கல்விசார் நேர்மைத்தன்மை போலிகளைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்யும். என்னையும், பல்கலைக் கழகத்தையும் பதட்ட நிலையில் வைத்திருக்க வேண்டுமென சிலர் நினைப்பது பகற்கனவாகவே முடியும்” என்றார்.

பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இதன்போது விலாவாரியாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் சிறந்த விளக்கங்களை அளித்தார்.


குற்றச்சாட்டுகளும் பதில்களும் அசல்பிரதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் >>>> Allegations and Responses

எதற்கும் அஞ்சேன் என்றாகிறார் உபவேந்தர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)