
posted 7th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
உலக சுற்றாடல் தினம்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பல நிகழ்வுகள்வைத்திய சாலையின் பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை இடம்பெற்றன.
உலக சுற்றாடல் தினம் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ். உதயராஜ் , பிராந்திய சுற்றாடல் அதிகாரி திருமதி செவ்வேள் குமரன் , வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஜெ. மதன் , கல்முனை சென்றல் பினான்ஸ் முகாமையாளர் ஜெ. அனோஜ் , வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது கடந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களை மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக பழ மரங்கள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்களின் குழந்தைகளினால் சுற்றாடல் பாதுகாப்பு, மரங்களை பாதுகாப்போம், பாதுகாப்பான இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை கிருமி நாசினிகள் என்னும் தொனிப்பொருட்களில் சுற்றாடல் காட்சிப்படுத்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)