
posted 18th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எபின் 33 ஆவது தியாகிகள் தினம்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 ஆவது தியாகிகள் தின நிகழ்வுகள் இம்முறை வடக்கு, கிழக்கு உட்பட ஐக்கிய இராஜ்ஜியத்திலும் வெகு உணர்வு பூர்வமாக இடம்பெறவுள்ளன.
ஜுன் 19 ஆம் திகதி தியாகிககள் தினத்தையொட்டியதாக மேற்படி தியாகிகள் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விடுதலைக்காய் உயிரிழந்த ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணியின் போராளிகளையும், பொது மக்களையும் நினைவேந்தும் குறித்த தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வுகள், இந்த வாரம் வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் தோழர் சின்னையா (சர்மா) தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 25 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்திலும் தியாகிகள் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்த தோழர் சின்னையா ஈழ மக்கள் புரட்சி சிகர விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்கள், மற்றும் சகோதர கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் எதிர்வரும் 25 ஆம் திகதி கிழக்கில், காரைதீவில் பிரதான தியாகிகள் தின நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தியாகிகள் தின நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிரமதான மற்றும் இரத்ததான நிகழ்வுகள் தற்சமயம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
மேலும் மட்டக்களப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதியும், காரைதீவு, பழைய வீ.சி. வீதி, விபுலாநந்தா கலாச்சார மண்டபத்தில் (பிரதான நிகழ்வு) எதிர்வரும் 25 ஆம் திகதியும் தியாகிகள் தின நிகழ்வுகள் சிறப்பாகவும், உணர்வு பூர்வமாகவும் இடம்பெறவுள்ளன.
இதேவேளை வவுனியாவில் 19 ஆம் திகதி குறித்த தியாகிகள் தின நிகழ்வுகள் நடைபெறவும் ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)