
posted 17th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். அமிர்தகழி கப்பலேந்திய மாதா கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வீடு ஒன்றில் நிர்மாணப்பணியின்போது பிரதான மின்சார இணைப்பில் தகடு இணைந்திருந்ததை கவனிக்காத நிலையில் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கவனயீனம் காரணமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த மேசன் வேலையில் ஈடுபடும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)