
posted 19th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இராணுவ முகாமில் தீ விபத்து
பூநகரி, முட்கொம்பன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று முன் தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சின்ன பல்லவராயன்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் கட்டட தொகுதியிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
மின்னொழுக்கு காரணமாகவே தீ பரவியதாகவும் எனினும், சிறிதுநேரப் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீயால் ஏற்பட்ட சேத விவரங்களை படைத் தரப்பு வெளியிட மறுத்து விட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)