
posted 23rd June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆளுநரால் நியமனம்
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நிந்தவூரைச் சேர்ந்த பி.ரி.ஏ. ஹசன் கௌரவ ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய பேரவை உறுப்பினராக பணியாற்றிவரும் இவர் இதற்கு முன்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், தற்பொழுது தனியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட கணக்காளராகவும், வியாபார விருத்தி ஆலோசகராகவும் தொழில் திறமை கொண்ட இவர் சமூகத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராவார்.
ஸ்ரீ ஜயவர்தனபுரம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப் பின் படிப்புகளுக்கான நிலையத்தில் பொதுத்துறை நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், புகழ் பூத்த லண்டன் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், லண்டன் வொல்வஹம்ப்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளதுடன் தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணிப் பட்டத்தை தொடர்வதுடன் இலங்கை சட்டக் கல்லூரியில் மாணவராகவும் உள்ளார்.
நமது சமகாலத்தில் சமூக அக்கறையும், அர்ப்பணிப்பும் கொண்ட கல்விமான்களில் ஒருவரான இவர் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிகளுக்கு கிடைத்த கௌரவமாகவே இதனை கருத வேண்டியுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)