
posted 7th June 2023

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய வெள்ளைக்கண்ணு குணசேகரம் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)