அஷ்ரப் அஸீஸ் காலமானார்

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அஷ்ரப் அஸீஸ் காலமானார்

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அஸீஸ் மன்றத்தின் தலைவரான அல் ஹாஜ் அஸ்ரப் அஸீல் காலமானார். இவர் பிரபல மலையக தொழிற்சங்கவாதி காலஞ்சென்ற அஸீஸின் புதல்வர் ஆவார்.

காலஞ்சென்ற அஸ்ரப் அஸீஸ்யின் ஜனாஸா நேற்று தெமடகொடையில் உள்ள குப்யாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறைவு தொடர்பாக பல்வேறு தொழிற் சங்கங்களும் தொழிற் சங்க பிரமுகர்களும் அரசியல் வாதிகளும், மற்றும் முக்கியஸ்தர்களும் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர். இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுதாப அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் விடிவிற்காகத் தனது இறுதி மூச்சு வரை குரல் கொடுத்த நாடறிந்த பிரபல தொழிற்சங்கவாதி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் ஏ. அஸீஸ் அவர்களின் புதல்வர் அஷ்ரப் அஸீஸ் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இவ்வுலக வாழ்வை நீத்த செய்தி ஆழ்ந்த கவலையளிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தனது அன்புத் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, தோட்டத் தொழிலாளர்களின் நலனை முன்னிலைப்படுத்தி, அதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர், அஸீஸ் மன்றத்தின் ஊடாகவும் அளப்பரிய பணிகளை ஆற்றினார். சிறந்த சமூக செயற்பாட்டாளராக விளங்கிய அஷ்ரப் அஸீஸ் தீவிர அரசியலில் ஈடுபடுவதிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

எப்பொழுதுமே ஆரவாரம் அற்றவராக, அமைதியான சுபாவத்தைக் கொண்டிருந்த அவர், மறைந்த தந்தையின் வாரிசாக மதிக்கப்பட்டு வந்தார். பல்வேறு பொது நிகழ்வுகளிலும் அவரைக் காணக்கூடியதாக இருந்தது.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் மகள், சகோதரர் குடும்பத்தினர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. அத்துடன், எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அன்னாரின் ஆன்மீகஈடேற்றத்திற்கும், சிறப்பான மறுமை வாழ்விற்கும் பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அஷ்ரப் அஸீஸ் காலமானார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)