
posted 11th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
அலி சப்ரிக்கும் - செந்தில் தொண்டமானுக்குமான கலந்துரையாடல்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின்போது சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன் அது தொடர்பான கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் முன்வைத்தார்.
ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதற்கு சாதகமான பதிலையும் வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)