
posted 25th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனன தினம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 61ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு இன்று (25) ஞாயிறு மலர் மாலை அணிவித்து சுடரேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் திருமதி சசிகலா ரவிராஜ், சமூக செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், சே. தமிழமுதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)