27 ஆம் திகதி வரை திறந்திருக்கும்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

27 ஆம் திகதி வரை திறந்திருக்கும்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை மேலும் இரு தினங்கள் அதாவது 27ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.என். டக்ளஸ் அறிவித்துள்ளார்.

குறித்த காட்டுப்பாதை கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது..

மீண்டும் அது ஜூன் 25 ஆம் திகதி மூடப்படும் என ஏலவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் களுதாவளை, நற்பிட்டிமுனை ஆலயங்களின் தீர்த்தோற்சவம் காரணமாக அந்தப் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப் பாதையை மேலும் இரு தினங்கள் திறந்து வைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இப் பாதை திறந்திருக்கும்.

கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 4 திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

கடந்த வருடம் 28820 பேர் காட்டுப் பாதையில் பயணித்திருந்தனர். இம்முறை 45 ஆயிரம் பேர் அளவில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

27 ஆம் திகதி வரை திறந்திருக்கும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)