
posted 9th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான 12 தோட்ட பெண்களுக்கு இடையே போட்டி.
தரமான பச்சை தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி சனிக்கிழமை (03) இடம் பெற்றது.
இந்த நிகழ்வை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான 12 தோட்டங்களில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு இடையே இடம்பெற்றது.
இந்த போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான ஓல்ட்டன் தோட்டத்தை சேர்ந்த என. விக்னேஸ்வரிக்கு ஒரு பவுண் தங்க குற்றியும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் பரிசாக தோட்ட நிர்வாகம் வழங்கியது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற சாமிமலை பகுதிகளில் உள்ள மாநெலி தோட்டத்தை சேர்ந்த ஜீ. பெரியம்மாவிற்க்கு அரை பவுன் தங்கம் எழுபத்தி ஜந்து ஆயிரம் ரொக்க பணம் பரிசாக தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது.
மூன்றாம் இடத்தை பெற்று கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள ஸ்டாக்ஹோம் தோட்டத்தை சேர்ந்த வீ. இதயவாணிக்கு அரை பவுன் தங்கம் மற்றும் ஜம்பது ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் வழங்கி கௌரவிக்கபட்டனர்.
இவ்வாறான நிகழ்வுகள் வருடாந்தம் இடம் பெற்று வருகிறது. இருந்த போதிலும் பெருமளவு பணம், தங்கம் இம் முறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் செயல்பாட்டின் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணி மேலும் சிறக்க வாய்ப்புண்டு என தோட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)