
posted 24th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தற்பளை கரம்பகம் பகுதியில் வீதியோரம் பையில் கட்டப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
பையில் கட்டப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேற்படி வெடிபொருட்கள் இரவு வேளையில் குறித்த பகுதியில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)