
posted 22nd June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
விபத்திற்குள்ளாகிய யாத்திரிகள் வாகனம் - சாரதி தப்பி ஓட்டம்
கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் போக்குவரத்து பஸ் அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை, பஸ் சாரதி விபத்து நடந்தவுடன் தப்பியோடிவிட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)