
posted 4th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
விகாரையை அகற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொடரும் போராட்டம்
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3ஆவது கட்டமாக நடத்தப்படும் இந்தப் போராட்டம் நேற்று (03) சனிக்கிழமை நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)