
posted 24th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வருடாந்தப் பொதுக் கூட்டம்
சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் நாளை 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.
கொழும்பு, டி.ஆர். விஜேவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில், மீடியா போரத்தின் தலைவர் புர்கான் பீ. இப்திகார் தலைமையில் கூட்டம் நடைபெறும். இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள கூட்டத்தின் முதலாவது விசேட அமர்வு கலைவாதி கலீல் அரங்கில் இடம்பெறும். இந்த அமர்வில், இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பதிஹிஷாம் ஆதம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். அத்துடன் சிறப்பு அதிதியாக களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் தெல்ஹகவத்தகே கழக பேராசிரியர் தெல்ஹகவத்தகே ராஜ்குமார் சோமதேவ கலந்து கொள்வதுடன், “இலங்கையில் முஸ்லிம்கள் மீள் நோக்கிப் பார்த்தால் எனும் தலைப்பில் சிறப்புரையும் ஆற்றுவார்.
மேலும், இந்த அமர்வின் போது ஊடகத்துறையில் பல வருடங்களாக சேவையாற்றியுள்ள தமிழ், சிங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளதுடன், அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலைவாதி கலீலுக்கு இரங்கல் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.
இரண்டாவது அமர்வு புதிய செயற்குழு உறுப்பினர்களின் தெரிவுக்கான அமர்வாக இருப்பினும் இம்முறை சகல செயற்குழு உறுப்பினர்களும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
அதிலும் பல வருடகாலம் முஸ்லிம் மீடியா போரத்திற்கு தலைமை தாங்கி கட்டி வளர்த்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அல் - ஹாஜ் என்.எம். அமீன் மீண்டும் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நாட்டின் பலபாகங்களிலிருந்தும் முஸ்லிம் மீடியாபோரம் அங்கத்தவர்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)