
posted 4th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
வங்கியை உடைத்து கொள்ளையிடும் முயற்சி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இலங்கை வங்கியை உடைத்துக் கொள்ளையிடும் பாரிய முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கி முகாமையாளரின் துரித நடவடிக்கையாலும், சமயோசித செயற்பாட்டினாலும் அது தடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வங்கியை உடைத்து வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள் பிரதான பாதுகாப்பு பெட்டகம் (லொக்கர்) வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து உள்ளே நுழைந்து லொக்கரை உடைக்க முயற்சித்தனர்.
இதன்போது வங்கியின் முகாமையாளர் லொக்கரின் கைபிடியில் தனது தொலைபேசி இலக்கத்தை இணைப்புச் செய்திருந்தமையால் லொக்கரைத் தொட்டவுடன் வீட்டிலிருந்த அவரது தொலைபேசியில் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
இதனையடுத்து துரிதமாகச் செயற்பட்ட முகாமைளாளர் உடனடியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸாரை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றபோது கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.
தலத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வங்கியின் சில பகுதிகள் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)