மாடுகள் அறுப்பது தொடர்பில் கலந்துரையாடல்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாடுகள் அறுப்பது தொடர்பில் கலந்துரையாடல்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு கல்முனைப் பிராந்தியத்தில் உழ்ஹிய்யாவுகாக மாடுகளை அறுப்பது தொடர்பில் உலமா சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

மாடுகளுக்கு ஒருவித நோய் பரவி வருவதாக கூறப்படுகின்ற நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றபோதே அவர் மேற்படி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் அன்றாட உணவிற்காகவும், எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு உழ்ஹிய்யா வழங்குவதற்காகவும் மாடுகளை அறுப்பது தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆடு, மாடுகளை அறுப்பதற்கான விசேட பொறிமுறைகளை வகுத்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தத்தமது பிரதேசங்களில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பரவலின் தன்மை மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகளை கவனத்திற் கொண்டு பிரதேச உலமா சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் விசேட தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்பாளர் டொக்டர் றிபாஸ் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் அனுமதி பெறப்படாமல் நோய்வாய்ப்பட்ட மாடுகளை அறுப்பவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மாடுகள் அறுப்பது தொடர்பில் கலந்துரையாடல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)