மண்ணகழ்வு விவகாரம் - அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவாதம்

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மண்ணகழ்வு விவகாரம் - அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவாதம்

பூநகரி கௌதாரி முனை பகுதியில் மண்ணகழ்வு மேற்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவாதம் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளிற்கிடையில் விவாதிக்கப்பட்டது. பூநகரி பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தி்கு அனுமதியளிப்பது தொடர்பிலான விடயம் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின்போது, அகழ்வில் ஈடுபட்ட தரப்பினால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அது நடைபெற்றிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார்.

இதன்போது தலைமைதாங்கி நடத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என வினவினார். 2017, 2018களில் இடம்பெற்ற குறித்த விடயத்தின்போது, யார் அபிவிருத்திக்குழு தலைவர்களாக இருந்தனர் என வினவியபோது அமைதி ஏற்பட்டு சர்ச்சை ஏற்பட்டது.

குறித்த காலப்பகுதியில் முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன், விஜயகலா மகேஸ்வரன், அங்கயன் இராமநாதன், எஸ் சிறிதரன் ஆகியோர் இணை தலைவர்களாக இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு இணை தலைவர்களாக இருந்தபொழுது ஏன் அதனை கண்டுகொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்தபோது சர்ச்சை எழுந்தது.

தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் காலத்தை வீணடிக்காது காற்றாலை மின்னுற்பத்தி தொடர்பாக ஆராய்வோம் என தெரிவித்து மேலும் பல விடயங்கள் அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது.

மண்ணகழ்வு விவகாரம் - அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவாதம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)