
posted 18th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
போசாக்கு உணவு வழங்கிய சுவிஸ் அமைப்பு
மன்னார் மாவட்டத்தில் தெரிவாகி மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்றச் செல்லும் மாணவர்களின் போசாக்கை அதிகரிக்கும் நோக்குடன் மன். புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி சுவீஸ் குழு வங்காலை அமைப்பின் ஊடாக போசாக்கு உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டன.
இவ் அபிவிருத்திக்குழு சுவிஸ் அமைப்பு தனது நிதியின் மூலம் வங்காலை அமைப்பினூடாக மன்னார் மாவட்டத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கு உதவி செய்வதில் அண்மைகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்கமைய மன். புனித ஆனாள் தேசிய கல்லூரி அதிபர் பிரான்சிஸ் ஸ்டான்லி டிமெல் லெம்பேட் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய மாவட்டமட்டத்தில் தெரிவாகி மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் அவர்களுக்கான நிறை உணவான கடலை, பயறு, பால், வாழைப்பழம் ஆகியன வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை (16) வங்காலை புனித ஆனாள் தேசிய கல்லூரியில் அதிபரிடம் வழங்கும் நிகழ்வாக இது இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொருட்களை கையளித்தார்கள்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)